இரவில் சரக்குகளை ஏற்றி இறக்க, சரக்குப் போக்குவரத்துக்குத் தடை இல்லை
இரவில் ஆட்களின் நடமாட்டத்துக்கு விதித்துள்ள தடை, சரக்குகளை ஏற்றவும் இறக்கவும், நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்களின் இயக்கத்துக்கும் பொருந்தாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை ஆட்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவில் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களைத் தடுப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கவும், சமூக விலகலை உறுதி செய்யவுமே இரவில் நடமாட்டத்துக்குத் தடை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சரக்குகளை ஏற்றவும், இறக்கவும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிச் செல்லவும், லாரிகளில் சரக்கு ஏற்றிச் செல்லவும். பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றில் இருந்து இறங்கியவர்கள் வீட்டுக்குச் செல்லப் பயணிப்பதற்கும் இந்தத் தடை பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார்.
Comments