குருவாயூர் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷணன் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும், அதை அரசு ஏற்பதாகவும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
திருச்சூர் மாவட்டத்தில் தொற்று குறைந்ததை அடுத்து அந்த மாவட்டத்தில் அமைந்துள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயில் கடந்த 9 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதே போன்று சபரிமலையில் பகதர்களை அனுமதிக்க வேண்டாம் என தந்திரி மோகனரு கண்டரரு கூறியதையும் கேரள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குருவாயூர் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை #GuruvayurTemple | #KeralaGovt https://t.co/BLDvUWa8Xo
— Polimer News (@polimernews) June 12, 2020
Comments