பீகார் தேர்தலில் மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வரும் அக்டோபரில் நடக்க உள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
எம்-3 வெர்ஷன் என அழைக்கப்படும் இந்த மேம்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரத்தில் மோசடி எதுவும் செய்ய முடியாது என்றும், அப்படி செய்ய நினைத்தால் அது தானாகவே செயலிழந்து விடும் எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மக்களவை தேர்தலில் பீகாரில் உள்ள 40 தொகுதிகளில், 39 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வென்றது. அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து அந்த வெற்றியை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதன் எதிரொலியாக மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அறிமுகமாகின்றன.
Comments