ப்ரீத் வெப் சீரியசின் 2ம் பாகம் ஜூலை மாதம் 10ம் தேதி அமேசானில் ரிலீஸ்

0 2384

இந்தி நடிகர் அபிசேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரீத் (Breathe) வெப் சீரியசின் 2ம் பாகம் ஜூலை 10ம் தேதி, அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரில்லர் வெப் சிரியசான ப்ரீத்தின் முதல் பாகத்தில் மாதவன் நடித்திருந்தார். மகனுக்காக கொலை செய்யும் தந்தையாக மாதவன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தை மையபடுத்தி எடுக்கப்பட்ட அந்த வெப் சீரியஸ், அமேசான் பிரைமில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து அந்த சீரியசின் 2ம் பாகம், ப்ரீத் இன் டு தி சேடோஸ் (Breathe Into The Shadows) எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமிதாப்பச்சனின் மகனும் பிரபல ஹிந்தி நடிகருமான அபிசேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அந்த சீரியசின் டீசரை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ஜூலை 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அபிசேக் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments