சென்னையில் கொரோனா பாதித்து வெளியே சுற்றிதிரிந்த 40 பேர் மீது வழக்குப்பதிவு

0 5429

சென்னையில் கொரோனா பாதித்து வீடுகளில் தனிமைபடுத்தப்பட்ட நிலையில், 40 பேர் கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றி திரிந்ததாக காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா கண்டறியப்பட்டோர், வீடுகளிலேயே 14 நாள்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இத்தகைய நபர்களில் சிலர் வெளியே  சுற்றித் திரிவதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின் அடிப்படையில் 40 பேர் மீது  காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக  ஆணையாளர் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைபடுத்தப்பட்டோர் வீட்டை விட்டு வெளியே சென்றால்  அவர்களையும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் கொரோனா மையங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments