கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா ? அமைச்சர் பதில்

0 29834

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின் முடிவுகள் எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் நவீன இயந்திரத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்லூரி கட்டிடங்கள் தற்காலிக கொரோனா மருத்துவமனைகளாக செயல்பட்டு வருவதால் தேர்வுகள் நடத்த இயலாத நிலையில் உள்ளது என்றார்.

செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments