மருத்துவ படிப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு- ராமதாஸ்
மருத்துவ படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 27% இட ஒதுக்கீட்டை வழங்கி, மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவ இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், உயர் வகுப்பு ஏழைகள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27% இட ஒதுக்கீடு என்பது மறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்யவும், இட ஒதுகீட்டை பாதுகாக்க அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments