வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை மறு வரையறை செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் -அன்புமணி
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை மறு வரையறை செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 5 கிலோமீட்டர் சுற்றளவுள்ள வேடந்தாங்கல் சரணாலயத்தின் முதல் ஒரு கிலோமீட்டரை மையப் பகுதியாகவும், அடுத்த இரண்டு கிலோமீட்டர் சுற்றளவை இடைநிலைப் பகுதியாகவும், கடைசி இரண்டு கிலோ மீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் பகுதியாகவும் வகைப் படுத்த முடிவு செய்திருப்பதாக தமிழக வனத்துறை கூறியுள்ள விளக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரணாலயத்தின் எல்லையில் இருந்து தான் சுற்றுச்சூழல் பகுதி அமைக்கப்பட வேண்டும். ஆனால், 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ளேயே சுற்றுச்சூழல் பகுதியை உருவாக்க தமிழக அரசு முயல்கிறது என்றும், இதன் மூலம் சரணாலயப் பகுதி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் சுருக்கப்பட்டு விடும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Comments