கொரோனாவுக்குப் பிறகு தனிநபர் கடன் கிடைப்பது கடினமாகும்?
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வங்கிகளிடம் இருந்து தனிநபர் கடன் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.
கடன் கொள்கை மற்றும் கடனாளிகள் தேர்வில் வங்கிகள் மிகவும் இறுக்கமான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என்பதால் இந்த நிலை ஏற்படும் என கிரடிட் தகவல்களை கையாளும் நிறுவனமான டிரான்ஸ்யூனியன் சிபில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார, வருவாய் இழப்புகளால் கடன்களை திருப்பிச்செலுத்துவதில் சுணக்கம் ஏற்படும் என வங்கிகள் கருதுகின்றன.
கடந்த கால கடன் வரலாறுகளை வைத்து பார்க்கும் போது , பொருளாதார நெருக்கடியான காலகட்டங்களில், ஈடுடன் கூடிய கடன்கள் மற்றும் வாகனக் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் உள்ள நிலைமை, தனிநபர், கிரெடிட் கார்டு தொகைகளை செலுத்துவதில் இல்லை எனவும் சிபில் தெரிவித்துள்ளது.
Comments