பத்ரிநாத் கோயிலில் உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு 5ம்கட்டமாக நீட்டிப்பு செய்யப்பட்டபோது, சில கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்க மத்திய அரசு அனுமதித்தது. இதையடுத்து பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள சமோலி மாவட்ட நிர்வாகம், அக்கோயிலை சுற்றியிருக்கும் பகுதிகளான மனா, பாம்னி கிராம மக்களுக்கு மட்டும் தற்போது சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்துள்ளது. இதனால் நீண்ட நாள்களுக்கு பிறகு அக்கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
உத்தரகாண்டின் பிற பகுதிகளை சேர்ந்தோருக்கும் பிற மாநிலத்தினருக்கும் 30ம் தேதி வரை அனுமதி இல்லை.
Comments