போபாலில் வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதிநாள்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்றாகும். அந்த மாநிலத் தலைநகர் போபாலில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு, அந்த பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த நாள்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என கூறியுள்ள அவர், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாடக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கட்டுப்பாட்டை மீறுவோர் சகித்து கொள்ளப்பட மாட்டார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிஸ்ரா கூறியுள்ளார்.
Comments