லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் நடவடிக்கை-சீன வெளியுறவு அமைச்சகம்

0 1018

லடாக் எல்லையில்  பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளை சீனாவும், இந்தியாவும் எடுத்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினர் இடையே கைகலப்பு நேரிட்டு, பிறகு படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றம் உருவானது. இதையடுத்து ராஜ்ஜீய ரீதியிலும், ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும் இருநாடுகளும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தின. இதன்பின்னர் எல்லையில் குவித்த  வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பிஜீங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங்கிடம் (HUA CHUNYING) செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாகவும், இதனடிப்படையில் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை இருநாடுகளும் எடுத்து வருவதாகவும், இதுதவிர வேறு தகவலை தெரிவிக்க இயலாது எனவும் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments