கோககோலோ, தம்ஸ்அப்பை தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி - ரூ.5 லட்சம் அபராதம்
கோககோலா, தம்ஸ் அப் குளிர்பான விற்பனைக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உமேத்சின் பி சவ்தா என்பவர் தாக்கல் செய்த மனுவில், அந்த குளிர்பானங்களை குடிப்பது உடல் நலனுக்கு தீங்கை விளைப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குறிப்பிட்ட இரண்டு குளிர்பானங்கள் விற்பனைக்கு மட்டும் தடை விதிக்க கோருவது ஏன் என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப அறிவு இன்றி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாவும், குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்னர்.
இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பொதுநல வழக்கை தவறான காரணங்களுக்கு பயன்படுத்தியதற்காக ஒரு மாதத்திற்குள் 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.
Comments