BSNL-ல் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ள ரூ.99ல் மலிவு விலை திட்டம்

0 25367

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், பிரிபெய்ட் சந்தாதாரர்களுக்காக அன்லிமிடெட் அழைப்புகள், காலர் டியுன் கொண்ட  99 ரூபாய் மலிவு விலை திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது.

நாட்டில் பல்வேறு தனியார் செல்பேசி நிறுவனங்களும், சந்தாதாரர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு மலிவு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு திட்டங்களை அறிவித்து  வருகிறது. அந்த வரிசையில், 99 ரூபாய் மலிவு விலை திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகபடுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் 22 நாள்களுக்கு நாள்தோறும் 250 நிமிட அழைப்புகள், காலர் டியூனை இலவசமாக அளிக்கப்படுவதாக ட்விட்டர் பதிவில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments