மதச் சுதந்திரம் பற்றி இந்தியாவில் ஆய்வு செய்ய அனுமதி இல்லை
அமெரிக்காவின் பன்னாட்டு மதச் சுதந்திரத்துக்கான ஆணைய உறுப்பினர்கள் விசா கோரியிருந்த நிலையில் அதை இந்தியா நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் பன்னாட்டு மதச் சுதந்திரத்துக்கான ஆணையத்தின் உறுப்பினர்கள், இந்தியாவில் மதச் சுதந்திரம் பற்றி ஆய்வு செய்வதற்காக ஏப்ரல் மாதத்தில் விசா கோரியிருந்தனர். வெளிநாட்டு அமைப்புகளுக்கு இந்தியக் குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மதிப்பிடுவதற்கான நிலைப்பாடு இல்லை என்று கூறி இந்திய அரசு அவர்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளது.
இந்த ஆணையம் இதற்கு முன் வெளியிட்ட ஆய்வறிக்கைகளை இந்திய அரசு மறுத்துள்ளதுடன், அவை ஒரு சார்பானவை எனவும் தெரிவித்தது. இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான தாக்குதல்கள் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாகப் பன்னாட்டு மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
Comments