தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

0 2102

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டிலேயே  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிராவும், அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பையும் திகழ்கிறது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமாக திகழும் தாராவியில் இதுவரை 1964 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் மேலும் 20 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து தாராவியில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 984ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின்  எண்ணிக்கையும் 75ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments