ஒரே நாளில் சென்னையில் 1,407 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டிய நிலையில், சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,407 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
சென்னையில் 9 - வது நாளாக ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையின் அருகாமை மாவட்டங்களான செங்கல்பட்டில் புதிதாக 127 பேருக்கு ,வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. திருவள்ளூரில் புதிதாக 72 பேரும், காஞ்சிபுரத்தில் 19 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, ராணிப்பேட்டை - 26, மதுரை மற்றும் திருவண்ணாமலையில் தலா 20, திருவாரூர் மற்றும் நாகையில் தலா 16, வேலூர் - 12, திண்டுக்கல் - 11 மற்றும் திருச்சியில் 10 பேரும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இரை ஆன 349 பேரில், 279 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சுமார் 13,310 பேர் சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை, 13,800க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
Overall zone-wise detailed status of COVID-19 cases in #Chennai.#Covid19Chennai #GCC #ChennaiCorporation pic.twitter.com/33yi0v3Hgw
— Greater Chennai Corporation (@chennaicorp) June 11, 2020
Comments