பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.12, 200 கோடி கடன் விநியோகம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பொதுத்துறை வங்கிகள் மூலம் இதுவரை, பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சுமார் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடன் தொகை விநியோகிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்து தெரி வித்துள்ள அவர், 100 சதவீத அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் சுமார் 24 ஆயிரத்து 260 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித் தார்.
ஸ்டேட் வங்கி மட்டும் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்துள்ளதாகவும், கனரா வங்கி 814 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுத்துறை வங்கிகள் மூலம் பயன்பெற்ற மாநிலங்கள் வரிசையில், உத்தரபிரதேசத்திற்கு அடுத்த படியாக தமிழகம் இடம் பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Comments