கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக சென்னை IIT முதலிடம்
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
தேசியளவிலான கல்வி நிறுவனங்களுக்கான ஒட்டு மொத்த தரவரிசைப் பட்டியலில், ஐஐஎஸ்சி பெங்களூரு 2ம் இடமும், டெல்லி ஐஐடி 3ம் இடமும் பிடித்துள்ளன. அதே போல் கல்லூரிகள் பிரிவில் டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு 3ம் இடம் பிடித்த சென்னை மாநிலக் கல்லூரி நடப்பாண்டில் 5ம் இடம் பிடித்துள்ளது. லயோலா கல்லூரி 6ம் இடத்தில் உள்ளது.
பல்கலைகழகங்களுக்கான தரவரிசையில் ஒட்டுமொத்த பட்டியலில் ஐஐஎஸ்சி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு 14வது இடத்திலிருந்த அண்ணா பல்கலைகழகம் 20வது இடத்துக்கும், 20வது இடத்திலிருந்த சென்னை பல்கலைகழகம் 22வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.
கற்றல், கற்பித்தல், உட்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, பட்டதாரிகளின் நிலை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த தர வரிசை வெளியிடப்படுகிறது.
Comments