தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கு..? அமைச்சர் பாண்டியராஜன் பதில்
சென்னை - தண்டையார்பேட்டையில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல் படுத்துவது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் 2-வது நாளாக அமைச்சர் பாண்டியராஜன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்டையார் பேட்டை மண்டலம், வைரஸ் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டினார். இங்கு முழு ஊரடங்கு அமல்படுத்துமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வார்டு வாரியாக கொரோனாவை ஒழிக்க புதிய வியூகம் வகுக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இன்னும் ஒரு வாரத்திற்குள், கொரோனா இல்லாத மண்டலமாக தண்டையார்பேட்டையை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று பரவுவதாக வெளியான செய்தி தவறானது என கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, அமைச்சர்
பாண்டிராஜன் தெரிவித்தார்.
தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கு..? அமைச்சர் பாண்டியராஜன் பதில் #Chennai #Tondiarpet #Coronavirus #Covid19 #FullLockdown #TNFightsCorona #MinisterPandiarajan #CMEdappadiPalaniswami https://t.co/8a95imzoaS
— Polimer News (@polimernews) June 11, 2020
Comments