11-ஆம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட தேர்வில் மட்டும் அனைவரும் தேர்ச்சி

0 4781

ரத்து செய்யப்பட்ட 11-ம் வகுப்பு இறுதிப்பாடத் தேர்வான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களில் மட்டும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த பாடங்களுக்கான பொதுத்தேர்வு வரும் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்தார்.

இதனால், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை தற்போது விளக்கத்தை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாகவும், 11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

11-ம் வகுப்புக்கு தேர்வு நடைபெற்ற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments