கிளேட் A 13 என்ற புதிய வைரஸ் பரவுவதாகக் கூறப்படுவதற்கு பீலா ராஜேஸ் மறுப்பு
கிளேட் A 13 என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாகக் கூறப்படுவதைத் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஸ் மறுத்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில், அரசு பணியில் இல்லாத பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை பீலா ராஜேஷ் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து உயிரிழப்புகள் நேராமல் புதிய முறையில் மருத்துவம் அளிப்பது குறித்து ஆராயக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
கிளேட் A 13 என்ற புதிய வைரஸ் பரவுவதாகக் கூறப்படுவதற்கு பீலா ராஜேஸ் மறுப்பு #BeelaRajesh https://t.co/z6mF4rJS7v
— Polimer News (@polimernews) June 10, 2020
Comments