கொரோனாவால் ஜப்பானில் பொருளாதார மந்தம் - அவசரகால பட்ஜெட் தாக்கல்
கொரோனாவால் ஏற்படும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க, சுமார் 22,57,200 கோடி ரூபாய் மதிப்பிலான அவசரகால பட்ஜெட்டுக்கு ஜப்பான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜப்பானில் கொரோனாவால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாத நிலையிலும், மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இது 2015 க்குப் பிறகு உருவாகும் முதலாவது பொருளாதார சரிவை காட்டுவதாக ஜப்பான் அரசு கருதியது.
இதை அடுத்து அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது மேலவையிலும் இந்த வாரம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் தொழிற்துறைகள், சிறு தொழில்களுக்கான உதவி, மானியம், மருத்துவ பணியாளர்களுக்கான பண உதவி உள்ளிட்ட பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
கொரோனாவால் ஜப்பானில் பொருளாதார மந்தம் - அவசரகால பட்ஜெட் தாக்கல் #Japan https://t.co/SVDwUtrrqe
— Polimer News (@polimernews) June 10, 2020
Comments