கொரோனா சிகிச்சைக்கு மேலும் 1239 மருத்துவர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு

0 2770

கொரோனா சிகிச்சைக்கு மேலும் 1239 மருத்துவர்கள் உட்பட 2834 மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத் துறை மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 4 ஆயிரத்து 893 செவிலியர்கள், ஆயிரத்து 508 லேப் டெக்னீசியன்கள் மற்றும் 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள், முதலமைச்சர் உத்தரவின்பேரில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் மருத்துவ படிப்பினை முடித்த 574 முதுநிலை மருத்துவ மாணவர்களை மாத ஊதியம் 75,000 ரூபாய் வீதத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கூடுதலாக நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

மாத ஊதியம் 60,000 ரூபாய் வீதத்தில் 665 மருத்துவர்களையும், மாத ஊதியம் 15,000 ரூபாய் வீதத்தில் 365 லேப் டெக்னீசியன்களையும், மாத ஊதியம் 12,000 ரூபாய் வீதத்தில் ஆயிரத்து 230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, பணியில் இணைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments