ஹோண்டாவின் தொழிற்சாலைகளில் சைபர் தாக்குதல்
பிரபல வாகன தயாரிப்பாளரான ஹோண்டாவின் தொழிற்சாலைகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, உலகம் முழுதும் உள்ள அதன் பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள 5 தொழிற்சாலைகள் உள்படமொத்தம் 11 ஆலைகள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பிரேசிலில் உள்ள ஹோண்டாவின் மோட்டார் சைக்கிள் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கி உள்ளது.
இந்த வார துவக்கத்தில் ஹோண்டாவின் இணையதள சர்வர்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
Comments