கொரோனா இல்லாத நாடாக மாறிய 9 நாடுகள்..!
நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன் உட்பட 9 நாடுகள் கொரோனா இல்லாத நாடுகளாக திகழ்கின்றன. நியூசிலாந்தில் இப்போதைக்கு கொரோனா நோயாளிகள் இல்லை என்பதால் 7 வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதேபோல் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் அந்நாடு கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளதாக அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார்.
வாடிகனில் ஜூன் ஆறாம் தேதி நிலவரப்படி 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளனர்.
இதேபோல் ஃபிஜி, மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் கொரோனா இல்லாதவையாக மாறியுள்ளன.
கொரோனா இல்லாத நாடாக மாறிய 9 நாடுகள்..! #Covid19 https://t.co/B3a2cN1APt
— Polimer News (@polimernews) June 10, 2020
Comments