உலகச் சாம்பியனான பிறகே, முதல் டெஸ்ட் வெற்றி... 54 ஆண்டுகள் காத்திருந்த இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி?

0 4430


ஒருநாள் உலகக் கோப்பையை மட்டும் முதல்முறையாக கபில்தேவ் இந்தியாவுக்கு பெற்றுத் தரவில்லை. கிரிக்கெட்டின் 'மெக்கா' எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியையும் கபில்தேவ்தான் பெற்று தந்தார். 1932- ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றியைபெற  54 ஆண்டுகள் இழவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டியது இருந்தது. 

அதாவது, 1986- ம் ஆண்டு ஜூன் 10- ந் தேதிதான் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு  வெற்றி கிடைத்தது. ஒரு நாள் உலகக் கோப்பையை கைப்பற்றிய பிறகுதான், இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்தது . இந்திய அணி வெற்றி பெற்றது எப்படி?

கடந்த 1986- ம் ஆண்டு ஜூன் 5- ந் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்குள் இங்கிலாந்து சுருண்டது. இங்கிலாந்து அணிக்காக கிரஹாம் கூச் 114 ரன்களை அதிகபட்சமாக சேர்த்தார்.

முதல் இன்னிங்ஸில் சேத்தன் சர்மாவும் கபில்தேவும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 341 ரன்களை எடுத்தது. அதாவது, இந்தியா 47 ரன்களை கூடுதலாக பெற்றிருந்தது. இந்தியாவுக்காக,  வெங்சர்க்கார் அதிகபட்சமாக 213 பந்துகளில் 126 ரன்களை அடித்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. கபில்தேவ் 4 விக்கெட்டுகளையும் மணீந்தர் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியா வெற்றி பெற 134 ரன்களே தேவைப்பட்டது.

ஆட்டத்தின் இறுதி நாளில் அதாவது ஜூன் 10- ந் தேதி இந்தியா 134 ரன்களை பெற்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ரவிசாஸ்திரி 23 ரன்களும் கேப்டன் கபில்தேவ் 20 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

1986 - ம் ஆண்டுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், ஒரே ஒரு வெற்றியைதான் பதிவு செய்துள்ளது. உலகக் கோப்பையை வென்று கொடுத்த மற்றோரு இந்திய கேப்டன் தோனிதான் அந்த வெற்றியையும் பெற்று கொடுத்தார். 

2014- ம் ஆண்டு நடந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதுவரை, லார்ட்ஸ் மைதானத்தில் மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வியை தழுவியது. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments