திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது

0 31772

சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையில் இருந்து, ஜெ.அன்பழகன் உடல், தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சிறிது நேரத்தில் அங்கிருந்து கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டு ஜெ.அன்பழகன் மறைந்ததால், அவரது உடல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னையில் காலமான திமுக எம்.எல்.ஏ - ஜெ.அன்பழகனின் உடல் கண் ணம்மாபேட்டை மயானத்தில் பிற்பகலில் அடக்கம் செய்யப்பட்டது. குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் இருந்து எடுத்தவரப்பட்ட ஜெ.அன்பழகனின் உடல், தியாகராயநகரில் உள்ள அவரது இல்லம் முன்பு, சிறிதுநேரம் வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், கண்ணம்மா பேட்டை மயானத்தில் ஜெ. அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன் நினைவிடம் அருகே 15 அடி ஆழ பள்ளம் தோண்டி, மருத்துவ வழிகாட்டுதல் படி முறையாக அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் ஜெ. அன்பழகனின்சகோதரர் மற்றும் மகள் மட்டும் பங்கேற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஜெ.அன்பழகனின் மனைவி மற்றும் மகன் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை.

அதேநேரம், சென்னை - அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ. அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவிர, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் இருவரும் தொலைபேசி மூலம் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு, ஜெ. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். தமிழகத்தில் எம். எல்.ஏ ஒருவர், கொரோனாவுக்கு பலியாகி இருப்பது, இதுவே முதன்முறை. ஜெ. அன்பழகன், தனது பிறந்த நாளிலேயே மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments