"உலகளாவிய உணவு அவசர நிலையை தடுக்க உடனடி நடவடிக்கைகள் தேவை"-ஐ.நா பொதுச் செயலாளர்
உலகளாவிய உணவு அவசர நிலையை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டோனியா குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கொரோனாவின் தாக்கம் குறித்து விளக்கமளித்தவர், 780 கோடி மக்களுக்கு வழங்க போதுமான அளவு உணவு இருந்தும், நமது உணவு அமைப்பு தோல்வியடைந்து உள்ளது எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து, உலக நாடுகளில் 82 கோடி பேர் பசியுடன் இருப்பதாகவும், 5 வயதுக்குட்பட்ட சுமார் 14 கோடி குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், உணவுத் தட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
Comments