இத்தாலிக்குள்ளேயே இருக்கும் கொரோனா இல்லாத தேசம் ... வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்ட 9 நாடுகள் எவை?

0 5081
வாட்டிகன்

உலகில் கிட்டத்தட்ட 213 நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவே இல்லாத நாடுகளும் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட 9 தேசங்களும் உள்ளன. கொரோனா இல்லாத நாடுகள் பட்டியலில் கடைசியாக சேர்ந்திருக்கிறது நியூசிலாந்து நாடு. இங்கு , 1500 கொரோனா நோயாளிகள் இருந்தனர். 22 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூன் 8- ந் தேதி நியூசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்தார்.

இதே ஜூன் 8- ந் தேதி தான்சேனியா பிரதமர் ஜான் மக்புலி,  கடவுளின் கிருபையால் தங்கள் நாட்டிலிருந்து  கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், கடந்த 6 வாரங்களாக கொரோனா நோயாளிகள் குறித்த பட்டியலை பொதுவெளியில் இந்த நாடு வெளியிடவில்லை. இதனால், தான்சேனியாவில் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இத்தாலிக்குள்ளேயே அமைந்துள்ளது வாட்டிகன் என்ற தேசம். போப் ஆண்வர்தான் இந்த நாட்டுக்குத் தலைவர். இந்த நாட்டில் 12 கொரோனா நோயாளிகள் இருந்தனர். ஜூன் 6- ந் தேதி கடைசி நோயாளியும் குணமடைந்ததாக வாட்டிகன் செய்தி தொடர்பாளர் மட்டுவோ புருனே அறிவித்துள்ளார். மக்கள் கொத்து கொத்தாக மடியும் இத்தாலிக்குள்ளேயே இருந்தாலும், இந்த நாட்டில் ஒரு இறப்பு கூட ஏற்படவில்லை.

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள ஃபிஜி நாட்டில் 18 கொரோனா நோயாளிகள் இருந்தனர். 9 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் . ஜூன் முதல் வாரத்தில் அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான மான்டிக்ரோவில் 324 கொரோனா நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 9 பேர் இறந்தனர். மே24- ந் தேதி கொரோனாவிலிருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக மான்டிக்ரோ அறிவித்தது. ஐரோப்பா கண்டத்தில் கொரோனா இல்லாத தேசம் என்று அறிவித்த முதல் நாடு மான்டடிக்ரோ.

செஷல்ஸ் நாட்டில் 11 கொரோனா நோயாளிகள் இருந்தனர். மே 24- ந் தேதி அனைவரும் குணமடைந்து விட்டதாக ஷெசல்ஸ் அறிவித்தது . வெஸ்ட் இண்டிஸ் அருகேயுள்ள செயின்ட். கிட்ஸ் அண்டு நெவிஸ் நாட்டில் 15 கொரோனா நோயாளிகள் இருந்தனர். மே 19- ந் தேதி அனைவரும் குணமடைந்து விட்டனர். பசிபிக் கடலில் இருக்கும் பப்புவாகினியா நாட்டில் 24 கொரோனா நோயாளிகள் இருந்தனர். மே 4- ந் தேதியே அனைத்து நோயாளிகளும் குணமடைந்து விட்டனர். இறப்பு ஏற்படவில்லை என்று பப்புவா கினியா அறிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments