10 ஆம் வகுப்பு.. ஆல் பாஸ் அட்ராசிட்டிஸ்..! சூடம் ஏத்தி வழிபாடு

0 13690

தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக 10ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வே இல்லாமல், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததால் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். பல சரித்திரசாதனைகளை நிகழ்த்திய அறிவிப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

90ஸ் கிட்ஸ்சால் ரசிக்கப்பட்ட வைகாசி பொறந்தாச்சி படத்தில் வரும் இந்த பாடல், 2கே கிட்ஸ்சான இன்றைய 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் மனதில் ஒலிக்கும் காலர் டியூனாக மாறியுள்ளது..!

கொரோனா பரவலால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் 5 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு போலவே இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது தமிழக அரசு.

மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல் பாஸ் என்று அறிவித்ததால் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாணவ மாணவியர் கொண்டாடி வருகின்றனர்

வாழ்நாளில் ஒரு முறையாவது தங்கள் பணியாற்றும் பள்ளிக்கூடத்தை ஆல்பாஸ் செய்து பார்க்க வேண்டும் என்ற பல ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கனவு இந்த ஒரே உத்தரவால் நிறைவேற்றப்பட்ட மகத்தான தினம்..! என்கின்றனர் சில ஆசிரியர்கள்.

வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி என்ற அவச்சொல்லை முதல்முறையாக விரட்டி, 10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகளுக்கு இணையாக மாணவர்களும் தேர்வாயினர் என்று சரித்திரம் மாற்றி எழுதப்பட்டுள்ளதாக மாணவர்கள் குத்தாட்டம் போடுகின்றனர்.

சமூக வலைதளங்களில் தங்கள் பங்குக்கு மீம்ஸ் களை பறக்க விட்டு கலாய்த்து வரும் நெட்டிசன்கள் ஒரு பக்கம் என்றால், மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கியதும், தற்போது ஆல்பாஸ் செய்ய வைத்ததும் திமுக தான் என அக்கட்சியினர் தங்கள் பங்கிற்கு மீம்ஸ் வெளியிடுகின்றனர்.

இப்படி பல சரித்திர சாதனைகள் இந்த ஒற்றை அறிவிப்பில் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், தேர்வு ரத்தானதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால், சில சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கும் என்றும் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐகளில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் நிலை ஏற்படும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கொண்டாட்டம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாளைக்கு வேலைக்குச் செல்லும் காலம் வரும் போது, 2020 கொரோனா பேட்ச் என்று மதிப்பெண் பட்டியல் இல்லாமல் சென்றால், அந்த நிறுவனத்தினர் வீட்டிலேயே இரு, பாதுகாப்பாக இரு என்று சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments