டெல்லியில் ஜூலை 31க்குள் கொரோனா பாதிப்பு 5.5 லட்சமாக அதிகரிக்கும்
டெல்லியில் அடுத்த மாத இறுதிக்குள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்தரை லட்சமாக அதிகரிக்கும் என்று துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் தற்போது 12 அல்லது 13 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருவதாக கூறினார்.
இதே வேகத்தில் தொற்று பரவினால் நடப்பு மாத இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சமாகவும், ஜூலை இறுதிக்குள் ஐந்தரை லட்சமாகவும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
டெல்லியில் வசிக்கும் மக்களுக்காக மட்டுமே மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்ற டெல்லி அரசின் உத்தரவை ரத்து செய்ததை நீக்க ஆளுநர் மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறவில்லை என்ற போதிலும், 50 சதவீதம் பேருக்கு கொரோனா எப்படி பரவியது என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.
Comments