தென்மேற்கு பருவக்காற்று, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கும், வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
Comments