கொரோனா படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்

0 1505

கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை அதிகரிக்கவும், உள்நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை இணைய தளத்தில் பதிவேற்றவும் தனியார் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர்.

தாமாகவே சேவை மனப்பான்மையுடன் முன்வந்து அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு ஒதுக்கி இந்த பேரிடர் காலத்தில் அரசுடன் இணைந்து செயலாற்றுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளும், உடனடியாக ஒரு பொறுப்பு அலுவலரை நியமிக்கவும், அவர் மூலமாக தமிழக அரசு கொரானா தடுப்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கியுள்ள இணையதளத்தில் மருத்துவமனையில் உள்ள வசதிகள், படுக்கைகளின் எண்ணிக்கைகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வபொழுது வெளிப்படைத்தன்மையுடன் பதிவேற்றுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதை தனியார் மருத்துவமனைகள் ஒரு மனதாக ஏற்று தங்களிடம் உள்ள அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கீடு செய்யவும், மேற்சொன்ன இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அவ்வபோது பதிவேற்றம் செய்யவும் ஒப்புதல் தெரிவித்ததாக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments