கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள அரசின் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவிக நகர் மண்டலத்திலுள்ள அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேவைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும் ஊரடங்கு அமலில் தான் உள்ளது, எனவே தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
முன்னதாக பேசிய சிறப்பு அதிகாரி, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை #Chennai | #MinisterRBUdhayaKumar https://t.co/5qGDoK0yHo
— Polimer News (@polimernews) June 9, 2020
Comments