கேரளாவில் கோயில்கள் மீண்டும் திறப்பு..!
கேரளா முழுவதும் இன்று முதல் கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு 5ம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்தபோது, சில கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதன்படி, கேரளாவில் வழிபாட்டு தலங்களை திறக்க மாநில அரசு அனுமதித்ததால், திருவனந்தபுரம் ஸ்ரீகாண்டீஸ்வரம் சிவன் கோயில், கொச்சி திரிக்காகார வாமனமூர்த்தி கோயில், கொச்சி எர்னகுளத்தப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்யவும், உடல் வெப்ப அளவை பரிசோதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments