சிரஞ்சீவி சர்ஜா உடல் அடக்கம்... மருமகன் உடலை பார்த்து நடிகர் அர்ஜூன் கண்ணீர்!

0 187584

கொரோனா பாதிப்பால் நாடே லாக்டௌனில் இருக்கும் நிலையில், கர்நாடக திரையுலம் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு மரணம் நிகழ்ந்தது.

கன்னட திரையுலகின் இளம் நடிகரான சிரஞ்சீவி சர்ஜா ( வயது 39) திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு நேற்று முன்தினம் இறந்து போனார். இளம் நடிகரின் திடீர் மறைவால்  கன்னட திரையுலகம் கண்ணீரில் மூழ்கியது. சிரஞ்சீவி சர்ஜா, தமிழ் நடிகர் அர்ஜூனின் சகோதரி மகன் ஆவார்.

பெங்களூரு கனபுராவில் உள்ள பண்ணை தோட்டத்தில் நேற்று சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் அடக்கம் நடைபெற்றது. கன்னட நடிகர்கள் புனித்குமார், உபேந்திரா, சுதீப் சிவராஜ்குமார், ராகேவேந்திரா ராஜ்குமார் உள்ளிட்டஏராளமானோர் சிரஞ்சீவி சர்ஜாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சிரஞ்சீவியின் மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். தன் கணவரின் உடலை பார்த்து மேக்னாராஜ் கத்றி அழுந்தது காண்போர் கண்களை கரைய வைத்து விட்டது. மேக்னாராஜை தேற்ற உறவினர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

அதேபோல், நடிகர் அர்ஜூனும் நீண்ட நேரமாக சிரஞ்சீவியின் முகத்தை பார்த்து அழுது கொண்டிருந்தார். பின்னர் சிரஞ்சீவியின் முகத்துடன் முகம் வைத்து முத்தமிட்ட நடிகர் அர்ஜூனை சுற்றியிருந்தவர்கள் தேற்றினர்.

கொரோனா காரணமாக, சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதிச்சடங்கில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.இறுதிச்சடங்கு நிகழ்ச்சி தொலைக்காட்சி மற்றும் யுடியூப் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments