வைரவியாபாரி நீரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட வைரவியாபாரி நீரவ் மோடியின் ஆயிரத்து 400 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்த புதிய சட்டத்தின் கீழ் நீரவ் மோடியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி சி பார்தே, நீரவ் மோடியின் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். புதிய சட்டத்தின் கீழ் நீரவ் மோடியின் சொத்துக்களே முதன் முதலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 2வது நபரும் நீரவ் மோடி ஆவார். முதலாவதாக அறிவிக்கப்பட்டவர் தொழிலதிபர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த நீரவ் மோடி தற்போது லண்டனில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
Comments