டெல்லி மருத்துவமனைகள் டெல்லிக் காரர்களுக்கே என்ற உத்தரவை ரத்து செய்த துணை நிலை ஆளுநர்
டெல்லி மருத்துவமனைகள் டெல்லிக் காரர்களுக்கே என்பது உள்ளிட்ட டெல்லி அரசின் 2 உத்தரவுகளை துணை நிலை ஆளுநர் ரத்து செய்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் அல்லாதவர் என்பதற்காக எவருக்கு சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என உத்தரவிட்டுள்ள ஆளுநர் அனில் பைஜால் சுகாதார உரிமை என்பது வாழ்வுரிமையுடன் இணைந்தது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே போன்று கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிச்சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்ட நிலையில் அறிகுறி இல்லாதவர்களுக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ஆளுநர் ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்களில் இருந்து விலகுவது கொரோனா பரவலுக்கே வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Delhi LG Anil Baijal directs authorities & departments concerned of NCT of Delhi, to ensure that ICMR strategy for COVID-19 testing in India issued on 18th May is strictly observed in NCT of Delhi without any deviation. pic.twitter.com/Od1xsjPEmt
— ANI (@ANI) June 8, 2020
Comments