வதந்தி பரப்பிய வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கொரோனா சிகிச்சை தொடர்பாக வீடியோ வெளியிட்ட முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற, போதிய படுக்கை வசதிகள் இல்லை என வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வதந்தி பரப்பும் வகையில் வரதராஜன் தவறான தகவல் வெளியிட்டுள்ளதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அளித்த புகாரின் பேரில், தவறான தகவல் மூலம் விரோத உணர்வைத் தூண்டுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், அரசின் உத்தரவுக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 4 பிரிவுகளில் வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வதந்தி பரப்பிய வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு #Chennai | #Varadarajan | #Covid19 https://t.co/f5YyYJvPMg
— Polimer News (@polimernews) June 9, 2020
Comments