எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ - ஜெ. அன்பழகனின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாகி உள்ளது.
கடந்த 2 - ஆம் தேதி, வைரஸ் தொற்று உறுதி ஆகி, சென்னை - குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஜெ. அன்பழகன் அனுமதிக் கப்பட்டார்.
காலையில் அவருக்கு ஆக்சிஜன் கூடுதலாக தேவைப்பட்ட தாகவும், மாலையில் அவரது உடல் நிலை மோசம் அடைந்து, கவலைக்கிடமானதாகவும், மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெ. அன் பழகனின் இருதயம் - சிறுநீரகத்தின் செயல் பாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், ரத்த அழுத்தத்தை சீராக்க , அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களாக ஜெ. அன்பழகனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது திடீர் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
#BREAKING || திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் : டாக்டர் ரேலா மருத்துவமனை
— Polimer News (@polimernews) June 8, 2020
அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது : டாக்டர் ரேலா மருத்துவமனை
|| #JAnbazhagan
Comments