எகிறும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட அச்சம்

0 2670

நாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு உயர்ந்து வருகிறது.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா, இந்தியாவிலும் பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது.

மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பில், தமிழகம் 2 - ஆவது இடம் வகிக்கிறது.

டெல்லியில் வைரஸ் தொற்று பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்க, குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ராஜஸ்தானில், கொரோனா பாதிப்பு, 11 ஆயிரத்தை நெருங்க, உத்தரபிர தேசத்தில் 10 ஆயிரத்து 500 ஐ தாண்டி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இதுதவிர, மேற்கு வங்காளம், கர்நாடகா, பீஹார், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 983 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா புதிய பாய்ச்சலை எட்டி உள்ளதால், மொத்த உயிரிழப்பு 7 ஆயிரத்து 200 - ஐ தாண்டி விட்டது.

நாடு முழுவதும் 2 லட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத் துவமனைகளில் தங்கி இருக்க, ஒரு லட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments