கொரோனா அதிகம் பரவிய தாராவியில் 6 நாட்களாக கொரோனா பலி இல்லை
ஒரு கட்டத்தில் மும்பையில் கொரோனா அதிகம் பரவிய பகுதிகளில் ஒன்றாக இருந்த தாராவியில் கடந்த வாரத்தில் கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.
ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் குறுகலான தெருக்கள், நெருக்கமான வீடுகள், அதிக மக்கள் நெருக்கம், அதிக மக்கள் நடமாட்டம் ஆகியவை உள்ளதால் கொரோனா அதிகம் பரவியது.
ஞாயிறு மாலை நிலவரப்படி இங்கு ஆயிரத்துத் தொள்ளாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 939 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
ஜூன் ஒன்றாம் தேதி புதிதாக 34 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. ஞாயிறன்று புதிதாக 10 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிக அளவில் சோதனை செய்தல், அறிகுறி உள்ளோரைத் தனிமைப்படுத்தல், தொடர்பைக் கண்டறிதல் ஆகியவற்றால் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய தாராவியில் 6 நாட்களாக கொரோனா பலி இல்லை | #Dharavi | #COVID19India https://t.co/TNz1LI0byv
— Polimer News (@polimernews) June 8, 2020
Comments