எஸ் வங்கி நிதி மோசடி , காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை
எஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பையில் காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவராக அதன் நிறுவனர் ராணா கபூர் இருந்தபோது, பல்வேறு நிறுவனங்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கிவிட்டுத் திரும்பப் பெறவில்லை.
கடனை வாராக்கடனாக அறிவித்ததற்குக் கைம்மாறாக அந்த நிறுவனங்களிடம் இருந்து ராணா கபூர் குடும்பத்தினர் முதலீடு, கடன் என்கிற வகைகளில் பணம் பெற்றதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் ராணா கபூர் குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காக்ஸ் அண்டு கிங்க்ஸ் நிறுவனமும் எஸ் வங்கியில் இரண்டாயிரத்து 267 கோடி ரூபாய் கடன்வாங்கிவிட்டுத் திரும்பச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments