கொரோனா நோயாளியின் சடலத்தை அடக்கம் செய்வதில் அலட்சியம்-3 பேர் பணி இடைநீக்கம்

0 6074

கொரோனா நோயாளியின் சடலத்தை அலட்சியமாக சவக்குழியில் தள்ளி விட்டு அடக்கம் செய்த விவகாரம் தொடர்பாக, அரசு ஊழியர்கள் மூவரை பணியிடைநீக்கம் செய்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த முதியவர் புதுச்சேரியிலுள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்ற அரசு ஊழியர்கள், சடலத்தை அலட்சியமாக சவக்குழியில் தள்ளி விட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விளக்கமளிக்க வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, இவ்விவகாரம் தொடர்பாக சுகாதார துறையில் ஒருவர், உள்ளாட்சி துறையில் இருவர் என 3 பணியாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments