10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை அரசு கைவிடவேண்டும் -மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோவிட் -19 வைரஸ் தற்போது அதிகம் வீரியம் உடைய கிளேட் A13i ஆக உருமாறி வருவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியடைய செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உட்பட பல தரப்பினருக்கும் கொரோனா பரவி வருவதை அறிய முடிகிற சூழலில், பொதுத்தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவ வழிவகுத்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான சூழல் உருவாகி இயல்பு நிலை திரும்பிய பின்னர், பொதுத்தேர்வை நடத்திக்கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா சூழலில் #10thpublic
— M.K.Stalin (@mkstalin) June 8, 2020
நடத்துவோம் என்னும் @CMOTamilNadu அரசின் முரட்டுப் பிடிவாதம் மாணவர்களின் உயிரை வைத்து விளையாடும் அபாயகரமான ஆட்டம்!
தேர்வினை ரத்து செய்க!
தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக, மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை! pic.twitter.com/RcV1iAHQ2s
Comments