முதல் குழந்தைக்காக ஆசையுடன் காத்திருந்த திரையுலக தம்பதி! கன்னட நடிகர் சீரஞ்சிவி சர்ஜாவின் உயிரை பறித்த 'கார்டியாக் அரெஸ்ட்'

0 19976
சிரஞ்சீவி சர்ஜா மற்றும் மேக்னா ராஜ்

இளம் கன்னட நடிகரும் நடிகை மேக்னா ராஜின் கணவருமான சீரஞ்சிவி சர்ஜா, கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2009- ம் ஆண்டு 'வாயுபுத்ரா ' என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர்  சீரஞ்சீவி சர்ஜா. கடைசியாக 'ஷிவார்ஜூனா ' என்ற படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 22 கன்னட படங்களில் நடித்துள்ள, சிரஞ்சீவி பெங்களூருவில் உள்ள தன் வீட்டில் நேற்று மதியம் 1 மணியளவில் தன் தந்தையுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, தீடிரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சிரஞ்சீவி இறந்து போனார். சீரஞ்சீவி சர்ஜாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இறந்து போன சிரஞ்சீவிக்கு வயது 39 மட்டுமே ஆகிறது.

சீரஞ்சிவியின் மனைவி பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ் ஆவார். ஏராளமான மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேக்னா நடித்த 'பியூட்டிஃபுல்' என்ற மலையாள படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. இதனால், கேரளாவிலும் மேக்னாராஜூக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2018- ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியின் இனிமையான இல்லற வாழ்வின் அடையாளமாக , மேக்னா ராஜ் தற்போது கர்ப்பமாக உள்ளார். முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிரஞ்சீவி சர்ஜாவின் திடீர் மறைவால் கன்னட திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா சீரஞ்சீவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  சீரஞ்சிவி சர்ஜா, நடிகர்  அர்ஜூனின் சகோதரி மகன் ஆவார். உடல் அடக்கம் இன்று நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments