1.25 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர் - அமித் ஷா
ஊரடங்கு சமயத்தில் சுமார் 1 கோடியே 25 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான ரயில்கள் மூலம், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 11 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியதாகவும், ரயில்களில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எந்த ஒரு போலீஸ் படையையும் பயன்படுத்தாமல் மோடியின் கோரிக்கையை ஏற்று மக்கள் தாமாகவே வீட்டிற்குள்ளேயே இருந்ததாக அமித் ஷா குறிப்பிட்டார். நிதிஷ்குமார் தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் பீகாரில் மீண்டும் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க. ஆட்சி அமையும் என்று அமித்ஷா தெரிவித்தார்.
Comments