வங்கிகள் மூலம் ரூ.17,705 கோடி கடன் வழங்க அனுமதி - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

0 3634

பொதுத்துறை வங்கிகள் மூலம் 17 ஆயிரத்து 705 கோடி ரூபாய் கடன்வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  நிதி அமைச் சகத்தின் டுவிட்டர் வலைப்பதிவில் தகவல் பதிவிட்டுள்ள நிர் மலா சீதாராமன்,  கடந்த வெள்ளிக்கிழமை வரை, 100 சதவீத அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், இம்முடிவு  எடுக் கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

இதுதவிர, 8 ஆயிரத்து 320 கோடி ரூபாய் கடன், ஏற்கனவே  விநியோகிக்கப்பட்டு விட்டதாக வும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எந்தெந்த வங்கி கள், எந்தெந்த மாநிலங்களுக்கு, எவ்வளவு தொகை கடன் வழங்கி யுள் ளன? என்ற இணைப்புப் பட்டியலையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார்.

ஊரடங்கால் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மேற் கொண்டு வரும் பணிகளில் ஒரு அம்சமாக இந் நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments