உயரும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட அச்சம்
நாடு முழுவதும் அதிக பட்சமாக ஒரே நாளில் புதிதாக 9 ஆயிரத்து 971 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு, வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத் தை நோக்கி முன்னேறி வருகிறது.
பட்டியலில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு,83 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
2 - ஆவது இடம் வகிக்கும் தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லியில் 27 ஆயிரத்து 600 பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட, இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
ராஜஸ்தானில், கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்தை தாண்ட, உத் தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் வைரஸ் தொற்று தாக்கியோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதுதவிர, மேற்கு வங்காளம், கர்நாடகா, பீஹார், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 287 பேர் மரணம் அடைந்ததால், கொரோ னா உயிர்ப்பலி 7 ஆயிரத்தை நெருங்கி விட்டது. நாடு முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவ மனை களில் தங்கி இருக்க, ஒரு லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.
#CoronaVirusUpdates: #COVID19 India Tracker
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) June 7, 2020
(As on 7th June, 2020, 08:00 AM)
▶️ Confirmed cases: 246,628
▶️ Active cases: 120,406
▶️ Cured/Discharged/Migrated: 119,293
▶️ Deaths: 6,929#IndiaFightsCorona#StayHome #StaySafe @ICMRDELHI
Via @MoHFW_INDIA pic.twitter.com/E55UmUPNL4
Comments